வழக்கறிஞர்கள் இரண்டு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

வழக்கறிஞர்கள் இரண்டு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

Update: 2024-08-29 06:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் திரு.பாலகுமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான புகார் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து கைது செய்துள்ளார்கள். இந்த கைதை கண்டித்து வருகின்ற இன்றும் நாளையும் நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்வது என பரமத்தி வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதை அடுத்து . நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருச்செங்கோடு வழக்கறிஞர் சங்கங்களும் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்தப் போராட்டம் காரணமாக சுமார் 250 வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கடந்த இரண்டு நாட்களாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் நாளையும் நடைபெறும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது

Similar News