உடுமலை அருகே யானை தாக்கி ஒருவர் படுகாயம்
தொட்டில் கட்டி மருத்துவமனை கொண்டு வந்தனர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு,ஆட்டுமலை,ஈசல் தட்டு,தளிஞ்சி,தளிஞ்சிவயல் மாவடப்பு,குலிப்பட்டி, குருமலை,மேல் குருமலை, காட்டுப்பட்டி, கருமுட்டி,பூச்ச கொட்டாம்பாறை உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.இவர்களது பிரதான தொழில் விவசாயமாகும்.அத்துடன் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மலைவாழ் மக்கள் வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மனிதன் வனவிலங்கு மோதல் ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது.அந்த வகையில் இன்று சாகுபடி பணிக்காக சென்ற குருமலை மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த வெங்கிட்டான்(50) என்பவரை காட்டு யானை தாக்கியது.இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அதைத் தொடர்ந்து மலை வாழ் மக்கள் சிகிச்சைக்காக அவரை தொட்டில் கட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர் எனவே மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மழையால் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்