உடுமலை அருகே நான்கு வழி சாலையில் பொள்ளாச்சி எம்.பி ஆய்வு
அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாகவே நடைபெற்று வருகின்றன இன்று வேடப்பட்டி நரசிங்கபுரம் ,பாறைமேடு , மைவாடி , போளரப்பட்டி ஆகிய தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள குறைகளை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி(திமுக) ஆய்வு செய்தார் . பின்னர் பாலப்பம்பட்டி பஞ்சாபி தாபா சந்திப்பில் ஆய்வின் போது 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எம்.பி முன்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் இப்பகுதியில் தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கப்படும் என பொள்ளாச்சி எம்பி பொதுமக்களிடம் தெரிவித்தார் ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் நாகராஜன் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.