இந்து முன்னணி சார்பில் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம்!
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி மற்றும் விஜர்சன விழாவை முன்னிட்டு மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விழா கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
.ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி மற்றும் விஜர்சன ஊர்வலம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இம்முறை விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் டுவிபுரம் இந்து முன்னணி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், விநாயகர் சதுர்த்தி மற்றும் விஜர்சன ஊர்வல கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி தலைவராக சிவனடி சாஸ்தா கோவில் நிர்வாகி வா.துரை நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக ஓ.எம். முருகன், எம். குமார், ஒருங்கிணைப்பாளராக எல்.ஆர், சரவணகுமார், செயலாளராக என். சிவகுமார், பொருளாளராக ஆதிநாத ஆழ்வார், அமைப்பாளராக ராஜேஷ், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்களாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் எஸ் இசக்கி முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் பலவேசம், மாவட்ட பொதுச் செயலாளர் வி நாராயண ராஜ் ஆகியோர் செயல்படுவர் என முடிவெடுக்கப்பட்டது.