திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் டி.எம்.செல்வகணபதி பங்கேற்ப்பு
எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஒன்றியங்களில் நடைப்பெற்ற திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.;
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் மற்றும் கொங்கணாபுரம் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் திமுக அரசு செய்த காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை எடுத்துக்கூறி இல்லந்தோறும் சென்று இளைஞர்களை திமுகவில் அதிகளவில் சேர்த்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் எடப்பாடி நல்லதம்பி, கொங்கணாபுரம் பரமசிவம், மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்..