இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றிய மர்ம நபர்
ராஜாக்கமங்கலத்தில்
குமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார விளை மற்றும் பருத்திவிளை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சுற்றி திரிகின்றனர். இது தொடர்பாக ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ தற்போது சமூகத் தலங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் சம்பவ தினம் இரவு 9:18 மணிக்கு கார விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டு காம்பவுண்டுக்குள் குதித்த மர்ம நபர் குனிந்தவாறு மெதுதுவாக சத்தம் இன்றி வீட்டின் முன் பகுதிக்கு செல்கிறார். அப்போது வீட்டில் இருந்து சத்தம் கேட்கவே உடனடியாக அந்த நபர் திரும்பி மீண்டும் வீட்டின் பின் பகுதிக்கு வேகமாக வந்து மறைந்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிற்று. இந்த காட்சியின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதிகளில் அதிக அளவிலான வலை கம்பெனிகள், கிளவுஸ் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். எனவே வட மாநில நபர்கள் யாரேனும் வீட்டுக்குள் புகுந்து திருட்டு முயற்சி செய்து வருகிறார்களா? என்னும் சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.