மங்கலம்பேட்டை அடுத்த புலியூர் காலனியைச் சேர்ந்தவர் அன்பழகன் மனைவி கொளஞ்சியம்மாள் (வயது 65). இவருக்கும் இவரது உறவினர்களான அய்யாக்கண்ணு மகன்கள் குப்புசாமி, கண்ணதாசன் ஆகியோருக்கு இடையே பாகப்பிரிவினை சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொளஞ்சியம்மாள் வீடு கட்டி வருகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த குப்புசாமி, கண்ணதாசன் மற்றும் கண்ணதாசன் மனைவி கம்சலா ஆகிய மூவரும் சேர்ந்து பாகத்தை விட அதிகமான இடத்தில் வீடு கட்டுவதாக கூறி கொளஞ்சியம்மாளை அசிங்கமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கொளஞ்சியம்மாள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் குப்புசாமி, கண்ணதாசன், கம்சலா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.