அன்னவாசல் அருகே உள்ள புல்வயலை சேர்ந்தவர் கருப்பையா டிரைவரான இவர் மோட்டார் சைக்கிளில் பெருமநாடு மலையடிபள்ளம் அருகே வந்தபோது எதிரே புதுக்கோட்டை சேர்ந்த சல்மான்கான் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கருப்பையா மற்றும் சல்மான்கான் ஆகிய இருவரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று கருப்பையா பலியானார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.