புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய பென்ஷன் திட்டம் ஒழிப்பு இயக்கம் சார்பில், தேர்தல் கால வாக்குறுதி படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் குப்புசாமி, மாவட்ட துணை தலைவர் மகேந்திரன், மாவட்டச் செயலாளர் சிங்கராயன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.