வ உ சி பிறந்த நாள்: அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை!
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதே முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த் சேகரன், துணை மேயர் ஜெனிடா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி கலைச்செல்வி திலகராஜ், நிர்மல் ராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், திமுக மாவட்ட பிரதிநிதிகள் தெர்மல் சக்திவேல், முருக பூபதி, திமுக மாவட்ட மருத்துவமனை தலைவர் அருண்குமார் பனிக்குழு தலைவர் கீதா முருகேசன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு அந்தோணி கண்ணன், அல்பட், திமுக வட்டச் செயலாளர்கள் கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், கங்கா ராஜேஷ், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், சோமு, மாரியப்பன், உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.