ஈரோடு மாவட்டம் அந்தியூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர் நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில் நாடு முழுவதும் ஆங்காங்கே இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம் இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நாளை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திங்கள்கிழமை அத்தாணி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது இதனைத் தொடர்ந்து இன்று அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் முன்பு பவானி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் போலீசாரின் கொடி அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்தார் இதில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் முருகையன் ரவி ஜெயமுருகன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கஸ்தூரி வனிதா சரவணகுமார் உட்பட சுமார் 80க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர் இந்த கொடி அணி வகுப்பு நகரின் முக்கிய வீதிகளான சத்திரோடு சிங்கார வீதி அரசு மருத்துவமனை பிரிவு பர்கூர் ரோடு வழியாக சென்று பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் நிறைவு பெற்றது