விழுப்புரத்தில் அரசு கல்லுாரி ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி ஆசிரியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

Update: 2024-09-13 02:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் அரசு கலை அறிவியல் கல்லுாரி எதிரில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார்.கூட்டு நடவடிக்கைக்குழு உறுப்பினர் விஜயரங்கம், மண்டல செயலாளர் தண்டாயுதபாணி, கிளைத்தலைவர் வெங்கடேசன், இணைச்செயலாளர் ஜோதிப்பிரியா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.பழைய ஓய்வூதியம், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்களை திரும்பபெறக் கோருதல், புத்தொளி, புத்தாக்கப் பயிற்சிக்கு கால நீட்டிப்பு வழங்குதல், பேராசிரியர் பணிமேம்பாடு வழங்குதல், முனைவர் பட்ட ஊக்க ஊதியம் வழங்குதல், ஆசிரியர் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நடத்துதல், கல்லுாரி ஆசிரியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தக் கோருதல், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் மாத ஊதியம் வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.கிளை பொருளாளர் அசோகன் நன்றி கூறினார்.

Similar News