வைகை அணையில் நாளை தண்ணீர் திறப்பு
85,563 ஏக்கர் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாய் கீழ் உள்ள ஒரு போக பாசன பரப்பான 19,439 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் திறப்பு
வைகை அணையில் நாளை தண்ணீர் திறப்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன பரப்பான 85,563 ஏக்கர் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாய் கீழ் உள்ள ஒரு போக பாசன பரப்பான 19,439 ஏக்கர் நிலங்களுக்கும், 45 நாட்கள் முழுமையாக 75 நாட்களுக்கு முறை வைத்து நாளை (செப்.15) முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 1.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்