ஓணம் பண்டிகையையொட்டி ஆண்டிபட்டி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
கனகாம்பரம் கிலோ ரூ.2,000க்கும், மல்லிகை ரூ.1700க்கும், முல்லை ரூ.1,700க்கும் விற்பனை
ஓணம் பண்டிகையையொட்டி ஆண்டிபட்டி மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. அதிகபட்சமாக கனகாம்பரம் கிலோ ரூ.2,000க்கும், மல்லிகை ரூ.1700க்கும், முல்லை ரூ.1,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் வ.உ.சி. சந்தையில் குண்டுமல்லி கிலோ ரூ.1,000க்கும், முல்லை பூ கிலோ ரூ.900க்கும் விற்பனையாகிறது.