திருப்பூரில் அரசு பேருந்து நேரத்தில் தனியார் பேருந்தை இயக்கியதால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் தர்ணா!

பிரபுவின் அரசு பேருந்து நேரத்தில் தனியார் பேருந்து இயக்கியதால் அரசு பேருந்து ஓட்டுநர் தரையில் அமர்ந்து நர்ணா போராட்டம்!

Update: 2024-09-14 10:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரசு பேருந்து நேரத்தில் தனியார் பேருந்தை இயக்கியதால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம். திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவைக்கு இரவு 7.05 க்கு தனியார் பேருந்தும், 7.10க்கு அரசு பேருந்தும் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று தாமதமாக வந்த தனியார் பேருந்து 7.06க்கு உள்ளே வந்து அரசு பேருந்தை வெளியே செல்லாதவாறு மறித்து பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்ற துவங்கினார்கள். இதனால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் பாலாஜி தாமதமாக வந்த தனியார் பேருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து நிமிடத்திலும் பயணிகளை ஏற்ற முற்பட்டு தங்களை வெளியே செல்ல விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டி தனியார் பேருந்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த நேரக் காப்பாளர்கள் தனியார் பேருந்து அப்புறப்படுத்தி அரசு பேருந்தை அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக இரண்டு பேருந்துகளும் புறப்பட்டு சென்றது.

Similar News