திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம்!
திருப்பூர் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தார்.;
திருப்பூர் போயம்பாளையம் குருவாயூரப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் இவர் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி காலை நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது சைக்கிள் மோதி முன்புறமாக விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.வியாழக்கிழமை மாலை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர் இதை தொடர்ந்து முருகானந்தம் உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்திருந்தார் இந்த நிலையில் அவரது கண், சிறுநீரகம்,நுரையீரல் இதயம் ,கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது.அரசு சார்பில் மரியாதைகள் அளிக்கப்பட்டது. அவரது உடலை வெள்ளிக்கிழமை மாலை ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்தனர்