திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்களை அள்ளிச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள்!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.;
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்களை அள்ளிச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள்! திருப்பூர் மத்திய பேருந்து நிலைய மைய வணிக வளாக கட்டிடத்தில் கடை வைத்திருப்பவர்கள் மின்சாரத்தை வெளியே எடுத்து பேருந்து நிற்கும் பகுதியில் கடை அமைத்திருப்பதாக இழந்த புகாரைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல உதவி ஆணையாளர் வினோத் தலைமையிலான அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர் அப்பொழுது 72 ஆம் எண் கடை மின்சாரம் வெளியே எடுக்கப்பட்டு பின்புறத்தில் கடை அமைத்திருப்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து அந்த கடையின் மின் இணைப்பை துண்டித்து பொருட்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர் மேலும் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக செய்திருக்கும் கடைகளை ஆய்வு செய்து பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்திருக்கும் வியாபாரிகள் உதவி ஆணையாளரிடம் இரண்டு அடி முன்னே வைத்துக் கொள்ள அனுமதி கோரினர். இதனை அடுத்து வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சிலரது பொருட்களை மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட்டார். விதிமுறைகளை மீறி கடை அமைத்திருக்கும் இரண்டு கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.