விழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவர் கைது

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

Update: 2024-09-16 00:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் விழுப்புரம் நகர பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, ஜி.ஆர்.பி., தெரு பகுதியில், கூலி தொழிலாளியான ராமலிங்கம் மகன் பழனி, 40; என்பவர், அரசால் தடை செய்யப்பட்ட ஆன் லைன் விற்பனையில் ஈடுபட்டது தெரிந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து, லாட்டரி ரூ.2,500 பணத்தை பறிமுதல் செய்தனர். இவர் மீது, ஏற்கனவே லாட்டரி சீடு விற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News