பெரம்பலூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சேர்ந்த மக்களில் சலவை தொழிலை மேற் கொள்பவர்களில் 1,200 பயனாளிகளுக்கு திரவ பெட் ரோலிய வாயு மூலம் இயங் கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. எனவே இத்திட்டத்தில் சலவை தொழிலை மேற்கொள்ளும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். அதற்கான விண்ணப்பத்தினை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத் தில் உள்ள மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவல கத்தில் பெற்று கொள்ளலாம். மேற்படி திட்டத்தில் தகுதி யானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்