வைகனை தரைப்பாலத்தில் தடுப்பு கம்பிகள் சேதம்

வைகனை பகுதியில் மேற்கு பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்கு செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளது இந்த பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு கம்பிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது

Update: 2024-09-18 02:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வைகை அணை தரைப் பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைகின்றனர்.வைகை அணையில் திறந்து விடப்படும் நீர் வலது, இடது கரைகளை இணைக்கும் தரைப் பாலத்தை கடந்து பெரிய பாலம் வழியாக பிக்கப் அணையில் சேர்கிறது.பின் அங்கிருந்துதேவைக்கு ஏற்றபடி கால்வாய் வழியாகவும் ஆற்றின் வழியாகவும் பிரித்து அனுப்பப்படும்.வைகை அணையில் 3000 கன அடிக்கும் அதிகமாக நீர்வெளியேற்றப்பட்டால் வெளியேறும் நீர் தரைப் பாலத்தை மூழ்கடித்து விடும்.அணையில் இருந்து 5000 கன அடிக்கும் அதிகமாக நீர் வெளியேறினால் தடுப்பு கம்பிகளின் அடிப்பாகமும் மூழ்கி விடும். தரைப்பாலத்தில் நீர் வரத்து அதிகமாகும் போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.மற்ற காலங்களில் தரைப்பாலம் வழியாக சென்று வலது, இடது கரைகளில் உள்ள பூங்காக்களை சுற்றுலா பயணிகள் ரசித்துச் செல்வர்.கடந்த ஆண்டு வைகை அணையில் அதிகப்படியான நீர் வெளியேறிய போது தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தது.இதுவரை சரி செய்யப்படவில்லை.அன்றாடம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உள்ள சுற்றுலா பயணிகள் பலர்கடந்து செல்லும் பாலத்தின் தடுப்புகளை சீரமைக்க வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்

Similar News