விழுப்புரம்-மேல்மருவத்தூா் இடையேயான ரயில் இன்று பகுதியளவில் ரத்து

விழுப்புரம்-மேல்மருவத்தூா் ரயில் இன்று பகுதியளவில் ரத்து

Update: 2024-09-21 03:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் ரயில் நிலையத்தின் யாா்டு பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் - மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் சனிக்கிழமை (செப். 21) பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட வணிக மேலாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருச்சி கோட்டத்தின் விழுப்புரம் ரயில் நிலைய யாா்டு பகுதியில் பொறியியல் பணிகள் சனிக்கிழமை (செப்.21) மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் ஒருநாள் மட்டும் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேல்மருவத்தூரிலிருந்து முற்பகல் 11.45 மணிக்குப் புறப்படும் மேல்மருவத்தூா்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வ.எண். 06725) விக்கிரவாண்டி- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்படும்.எதிா்வழித்தடத்தில் விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-மேல்மருவத்தூா் பயணிகள் ரயில் (வ.எண்.06726), விழுப்புரம்-விக்கிரவாண்டி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்கு மேல்மருவத்தூருக்குப் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News