இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால் அதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது
22/09/2024 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பாக நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் பணி புரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், டெங்கு மலேரியா மஸ்தூர் பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் ஆகியோர் சம்பந்தமான 13 அம்ச கோரிக்கைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியகுளம் அக்ரஹரா தெருவில் அமைந்துள்ள மாங்கனி மஹாலில் நடைபெற இருக்கின்ற மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி பணியாளர்களுக்கு இன்று 21/09/2024 அழைப்பிதழ் வழங்கினார்கள்