ரயில்வே தனியாரிடம் மாற்றுவதை தொடர்ந்து தடுத்து வரும் எஸ் ஆர் எம் யூ
ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளை ரயில்வே நிர்வாகம் பறிக்காமல் எஸ்.ஆர்.எம்.யு. தடுத்து காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது:- மயிலாடுதுறையில் எஸ்ஆர்எம்யு தொழிற்சங்க தேர்தல் குறித்த ஆயத்தக்கூட்டத்தில் எஸ்ஆர்எம்யு தலைவர் ராஜா ஸ்ரீதர் பேட்டி
:- மயிலாடுதுறையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கம் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆயத்தக்கூட்டம் நடைபெற்றது. திருச்சி கோட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எஸ்ஆர்எம்யு தென்னக ரயில்வே தலைவர் ராஜாஸ்ரீதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழிற்சங்க செயல்பாடுகள் குறித்தும், டிசம்பர் மாதம் நடக்க உள்ள மறைமுக தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார். பின்னர் எஸ்ஆர்எம்யு தலைவர் ராஜாஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக வலியுறுத்தி 2019-ஆம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்துவதால் ரயில்வே நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தேர்தல் நடத்த உள்ளனர். வரும் டிச,4,5 தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் எந்த தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுப்பார்கள். அதற்கான ஆயத்த கூட்டம் நடைபெற்றது. பதவி உயர்வுக்கான உத்தரவுக்கு காலம் தாழ்த்துகின்றனர். ரயில்வே தொழிலாளர்கள் பெறவேண்டிய பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. 2026ல் 8-வது சம்பள கமிஷன் அறிவிக்க வலியுறுத்தி போராட உள்ளோம். ரயில்வே தனியார் மயமாக்கப்படாமல் அரசு ஊழியர்களாக இருக்க வேண்டுமென்று தனியார் மயத்தை போராட்டத்தின் மூலம் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிகொள்வதோடு, அடிதட்டு மக்களுக்கு ரயில்வே பயன்படும், தனியார்மயமானால் வசதி படைத்தவர்களுக்கு உரியதாக ரயில்வே நிர்வாகம் மாறிவிடும் என்பதை தடுப்பதற்காக போராடி வருகிறோம். 1924ம் ஆண்டு ரயில்வேயில் பென்ஷன் இல்லை. 1927 பென்ஷனனுக்காக போராடிய தொழிற்சங்கம் ரயில்வேயில் இல்லை. பென்ஷன் வரும்போது ரயில்வே 8 சதவிகிதம், தொழிலாளி 8 சதவிகிதம். 1957ல் தான் ரயில்வேயில் முதன்முதலாக பென்ஷன் கொடுத்தனர். 1972ல் பென்ஷன் நடைமுறைப்படுத்தப்பட்டது. என்னுடைய உழைப்பை பயன்படுத்திகொணட அரசாங்கம் நான் போடும் பணத்தை பங்கு சந்தையில் போடுகிறேன் எவ்வளவு வரும் என்பதை சந்தை தீர்மானிக்கக்கூடாது. அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் ஓய்வு பெற்றவர்களுக்கும்பென்ஷன் உயர்த்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். ரயில்வேயில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய எஸ்ஆர்எம்யூ போராடி வருகிறது. 2002ம் ஆண்டு ரயில்வேயை கூறு போட்டார்கள். அதனை செயல்படுத்த முடிந்ததா? ரயில்வே ஊழியர்கள், தொழிலாளர்களுக்கான உரிமைகளை ரயில்வே நிர்வாகம் பறிப்பதை நடக்காமல் தடுத்துகொண்டிருக்கிறது எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கம் என்றார்.