அரசு உதவி பெறும் தருமபுர ஆதீன தொடக்கப்பள்ளியில் கல்வி இயக்குனர் ஆய்வு

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆய்வு

Update: 2024-09-22 03:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
:-  மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் பி.நரேஷ் ஆய்வு செய்தார்.  இப்பள்ளியில் 532 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மயிலாடுதுறை வட்டாரத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் அதிக மாணவர் சேர்க்கையை கொண்ட பள்ளியாக இப்பள்ளி விளங்குகிறது. இங்கு 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்கள், செய்தித்தாள் ஆகியவற்றை படிக்கச் செய்தும், நோட்டுப்புத்தகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை எழுதச்சொல்லியும் தொடக்கக் கல்வி இயக்குநர் பி.நரேஷ் ஆய்வு செய்தார். மேலும், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் அவர்கள் அருகில் அமர்ந்து, அவர்கள் படிக்கும் பாடங்களைப் பற்றி கேட்டு ஆய்வு செய்தார். மேலும், பள்ளியில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். முடிவில், இப்பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் மாணவர்களின் கல்வித்தரம் சுயநிதி பள்ளிகளை விஞ்சுவதாக உள்ளதாக தலைமை ஆசிரியர் வெங்கடேசனுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, விஜயதசமி மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, தமிழ்நாடு கல்வித்துறையின் சாதனைகளை விளக்கும் குறும்படத்தை ஒளிபரப்பும் வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஆய்வின்போது, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் வட்டார கல்வி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News