முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களது சிறார்கள், விதவையர்கள் மற்றும் படை பணியின்போது இறந்த, ஊனமுற்ற படை வீரர்களின் விதவையர், தமது சிறார்கள் இரண்டு பேருக்கு மட்டும் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறலாம்.இக்கல்வி உதவித்தொகை பெற இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்திற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியில் பிளஸ் 2 மற்றும் இளங்கலை தேர்வில் முறையே 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். 2024-25ம் கல்வியாண்டில் சேர்க்கை பெற்றவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். பெண் வாரிசுகளுக்கு மாதம் 3,000 ரூபாய் என ஆண்டுக்கு 36,000 ஆயிரம் ரூபாய், ஆண் வாரிசுகளுக்கு மாதம் 2,500 ரூபாய் என ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களை www.ksb.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். படிவங்களைப் பூர்த்தி செய்து உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நலன் கல்லுாரி அதிகாரி, வங்கி மேலாளர் ஆகியோரிடம் உரிய முறையில் ஒப்பம் பெற்று தேவையான ஆவணங்களுடன் சரிபார்த்தலுக்காக வரும் நவம்பர் 29ம் தேதிக்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.