ராகுல் காந்தி குறித்து அவதூறு பேச்சு பிஜேபி தலைவர் மீது போலீசில் புகார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கொலை செய்ய முயற்சிக்கும் வகையிலும் உடலில் காயம் ஏற்படுத்தும் நோக்கிலும் பேசி வரும் பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த ஹெச் ராஜா உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை டிஎஸ்பியிடம் காங்கிரஸ் கட்சியினர் எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில

Update: 2024-09-24 22:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேசவிரோதி, பயங்கரவாதி என்றும், நாக்கை அறுப்பவருக்கு பரிசு தொகை அறிவித்தும் கொலைமிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் விதமாக பேசி வரும் பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டனி கட்சியினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி திருப்பதியிடம் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அளித்த மனுவில் மத்திய அரசில் எதிர்கட்சி தலைவராக செயலாற்றி வரும் தலைவர் ராகுல்காந்தி மக்களவையில் பெண்கள், இளைஞர்கள், தலித்துகள், மற்றும் பிற விளிம்பு நிலைப்பிரிவினர் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து எழுப்பி வரும் கருத்துக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. இதனால் இந்நதியாவின் எதிர்கட்சி தலைவரரான  ராகுல் காந்தி மீது வெறுப்பு நிறைந்த கருத்துக்களை கூற பணிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பொறுப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தலைவர் ராகுல்காந்தியை தேசவிரோதி என்றும், , உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ்சிங், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத்பிட்டு ஆகியோர் அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தலைவர் ராகுல் காந்தியை , நம்பர்ஒன் பயங்கரவாதி என்றும், பாஜக தலைவர் தர்விந்தர்சிங் மர்வா நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தியே நிறுத்துங்கள் இல்லையேல் எதிர்காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும் என்றும்,   பாஜக கூட்டணி மகாராஷ்டிராவை சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட் எம்எல்ஏ ராகுல்காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் என்று பகிரங்கமாக அறிவித்து பேசியுள்ளனர். தனிப்பட்ட வெறுப்பு நிறைந்த கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கலவரத்தை தூண்டி தலைவர் ராகுல் காந்தியை கொலை செய்ய, உடலில் காயம் ஏற்படுத்த  பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினர் திட்டமிடுவதாக மனுவில் குறிப்பிட்டு  தலைவர் ராகுல்காந்தியை உடலில் காயம் ஏற்படுத்தியும் கொலை செய்ய தூண்டும் வகையில் பேசிய மேற்கண்ட நபர்கள் மீது பிஎன்எஸ் சட்டம் 2023ன்படி  351, 352, 353, 61 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 5 நபர்கள் மீதும்  தனிதனியாக புகார் மனு வழங்கி ஆதாரங்களை கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News