சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையம் திறப்பு

சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையம் திறப்பு

Update: 2024-09-26 05:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 13 வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் ரூபாய் 13 லட்சம் செலவில்நகராட்சி மற்றும் ஜெய்.ஆர்.ஓ இண்டஸ்ட்ரீஸ் இணைந்து அமைத்துள்ள சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையத்தைத்தைநகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மற்றும் நகர மண்டல அமைப்பு குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர்திறந்து வைத்தனர். மேலும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகத்தையும் தொடங்கி வைத்தனர். இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தில் ஒரு லிட்டர் ஒரு ரூபாய்க்கும் ரூ. 5 ரூபாய்க்கு 10 லிட்டரும் பத்து ரூபாய்க்கு 20 லிட்டரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.ஒரு மணி நேரத்தில் 50 குடங்கள் என பத்தாயிரம் லிட்டர் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும். அதேபோன்று முன்பணம் செலுத்தி ஏடிஎம் கார்டு போன்ற அட்டைகளைப் பெற்று குடிநீர் பெற்றுக் கொள்ளும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். இதனால் இந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்செங்கோட்டில் நான்கிற்கு மேற்பட்ட இடங்களில் இது போன்ற பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் 13 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சினேகா ஹரிகரன், நகர மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் தாமரைச்செல்வி மணிகண்டன், மாதேஸ்வரன், ராஜா, செல்லம்மாள் தேவராஜன், திமுக வழக்கறிஞர்கள் அணித் தலைவர் சுரேஷ் பாபு, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News