தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலமாகச் சென்று கோரிக்கை மனு

தோகைமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் மனு வழங்கிய விவசாயிகள்

Update: 2024-09-27 12:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய நாகனூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்கிட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க கோரி கழிவறையுடன் கூடிய சுகாதார வளாகம் அமைக்க கோரியும் 100 நாள் வேலையை தொடர்ச்சியாக அனைவருக்கும் வழங்கியும் சட்டக் கூலி ரூபாய் 319 வழங்கிட கோரியும், எதிர்காலத்தில் நாகனூர் ஊராட்சியை புதிய பேரூராட்சியில் இணைப்பதை தடுக்க கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சக்திவேல் தலைமையில் இன்று தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய ஊர்வலம் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வரை சென்றடைந்தது. பிறகு அலுவலகத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு . இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் செயலாளர் முனியப்பன், முருகன் மற்றும் நல்லா கவுண்டம்பட்டி பகுதி விவசாய சங்க நிர்வாகிகள் மணி, ராசம்மாள், இந்திராணி, சிறும்பாயி, ரத்தினம், இந்துமதி, தனலட்சுமி, தங்கம்மாள், அன்னக்கிளி மற்றும் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றிய தலைவர் அழகேசன் நன்றி கூறினார்.

Similar News