உளுந்துார்பேட்டையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மூன்று மாவட்ட வன அலுவலர்களுக்கான களப்பயிற்சி முகாம் நடந்தது. உளுந்துார்பேட்டை வன விரிவாக்க மையத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக முதன்மை வன பாதுகாவலர் பெரியசாமி கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முகாமில் மூத்த விஞ்ஞானி மாயவேல், வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் கோவை தொழில்நுட்ப அலுவலர்கள், மூன்று மாவட்டங்களை சேர்ந்த 45 வன அலுவலர்களுக்கு கள பயிற்சி அளித்தனர். அப்போது நாற்றங்கால் உருவாக்கும் முறைகள், சிறந்த தாய் மரத்தை தேர்வு செய்தல், விதைகளை எவ்வாறு கையாள்வது, நாற்று உற்பத்தி பற்றிய தொழில்நுட்பம், உயிர் உரங்கள் மற்றும் பூச்சி மேலாண்மை பற்றிய கருத்துக்கள் மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.