ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பிராதுக்காரன்பட்டியைச் சோ்ந்த மலைச்சாமி மகன் விஜய் (27) ஜெயமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் கல் உடைக்கும் கிரஷரில் வேலை செய்து வந்தாா். மேலும் டிப்பர் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள பிராதுக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் மலைச்சாமி மகன் விஜய் (27). இவா் ஜெயமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் கல் உடைக்கும் கிரஷரில் வேலை செய்து வந்தாா். விஜய் வைகை அணை-க.விலக்கு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலை திருப்பத்தில் திரும்பிய போது, எதிரே ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த ராஜாமணி என்பவா் ஓட்டி வந்த டிப்பா் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜய் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து டிப்பா் லாரி ஓட்டுநா் ராஜாமணி மீது க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.