குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராடியவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில துணைத்தலைவர் ஓ எம் ஏ முசாஹுதீன் மற்றும் பொறுப்பாளர்கள், குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராகினர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மாநில துணைத் தலைவர் O.M.A. முசாஹுதீன், சீர்காழிநகர துணைத் தனவர் முகம்மது யூனுஸ், நகர துணைச் செயலாளர் முகம்மது இக்பால் ஆகியோர் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், ஆஜராகினர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடியவர்கள்மீது உள்ள வழக்குகளை தமிழக அரசு ஏற்கனவே திரும்பப் பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில ஊர்களில் வழக்குகள் திரும்பப் பெறாததால் இன்று வரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநிலத் துணைத் தலைவர் ஓஎம்ஏ. முசாகுஹுதீன் தெரிவிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய வழக்கில் தமிழக முழுவதும் ஒட்டுமொத்தமாக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்தபிறகு இதுபோன்று விடுபட்டதற்கு என்ன காரணம் என்று லோக்கல் காவல் நிலையம், மாவட்ட கால் கண்காணிப்பாளர் அலுவலகம் போன்றவற்றில் விசாரித்தால் நீங்கள் தலைமைச் செயலகத்துக்கு சென்று அங்கு விசாரிங்கள் என்று கூறி அலட்சியப்படுத்துகான்றனர், சீர்காழியில் புனித பயணம் செல்வதற்கு இந்த வழக்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அரசு ஏன் இரட்டை வேடம் போடுகிறது என்று தெரியவில்லை. தமிழகம் முழுதும் இதுபோன்று ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இதுபோல் இஸ்லாமியர்களை பழிவாங்குவது வேதனையாக இருக்கிறது.