கல்லூரி மாணவ மாணவிகளால் பாரம்பரிய உணவு வகைகளின் அணி வகுப்பு
மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் கல்லூரியில் இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள், மூலிகை சிற்றுண்டிகள், அடுப்பு இல்லாமல் சமைத்த நொறுக்கு தீனிகள் என 90 கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை விரும்பி உண்ணும் உணவு வகைகள் மாணவர்களால் உருவாக்கப்பட்டு விற்பனை கண்காட்சி
மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி அரசு உதவிபெறும் கல்லூரியில் இளம் தொழில் முனைவோர் திறனை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு விற்பனை சந்தை நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள், மூலிகைகளால் ஆன சிற்றுண்டிகள், அடுப்பு இல்லாது சமைத்த நொறுக்கு தீனிகள், ஐஸ்கிரீம், காய்கறி சூப், பழச்சாறுகள், மாணவர்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டுக்கள், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், ஒப்பனைப் பொருள்கள், மெஹந்தி போடுதல், மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருள்கள் என பல்வேறு வகையில் அரங்குகள் அமைந்திருந்தன. மாணவர்கள் விற்பனை சந்தையினை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான வெங்கட்ராமன் ரிப்பன் வெட்டி விற்பனை சந்தையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவங்கி வைத்தார். இதில் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.