துணை முதல் பொறுப்பு ஏற்பு பூம்புகார் தொகுதியில் கொண்டாட்டம்

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் திருக்கடையூரில் திமுக நிர்வாகிகள் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-09-29 16:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
:- தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருந்து வந்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றியம் சார்பில் திருக்கடையூர் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமையில் ஏராளமான திமுக நிர்வாகிகள் வெடி வெடித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க என கோஷங்களை எழுப்பினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திமுக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News