சாம்சங் கம்பெனியில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் அமைக்க எதிர்ப்பு கண்டித்து போராட்டம்
காஞ்சிபுரம் சாம்சங் கம்பெனியில் தொழிற்சங்கம் துவங்க அனுமதி மறுப்பது கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்ப அங்காடி முன்பாக ஆர்ப்பாட்டமும் சாலை மறியலும் நடைபெற்றது இந்திய தொழிற்சங்க மையத்தினர்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் தொழிற்சங்க மையத்தினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக சாம்சங் நிறுவனத்தையும் தமிழக தொழிலாளர் துறையினரையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்திய அரசியல் சட்டம் வழங்கி உள்ள உரிமையை உறுதிப்படுத்து, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்களுக்கு விரோதமாக செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடு என முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட20 நபர்களை மயிலாடுதுறை போலீசார் கைதுசெய்தனர்.