நெல் கொள்முதல் நிலைய தர கட்டுப்பாட்டு மேலாளர் நடவடிக்கையால் ஒருவர் தற்கொலை முயற்சி
தமிழக அரசின் நெல் கொள்முதல் செய்வதில் தர கட்டுப்பாட்டு மேலாளர் டியால் ஊழியர் தற்கொலை முயற்சி நடவடிக்கை கோரி மயிலாடுதுறைஸ்பீடு புகார் மனு
மயிலாடுதுறை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் தற்கொலை முயற்சிக்கு காரணமான தரக்கட்டுப்பாட்டு மேலாளரை வேலை நீக்கம் செய்ய வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவத்துக்கான நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டம் முழுவதும் 160 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இவற்றில் தற்போது பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல் கொள்முதல் முடிவடைந்துள்ளது. இதனிடையே, சீர்காழி அருகே அகணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சமீபத்தில் ஆய்வு செய்த நுகர்பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாட்டு மேலாளர், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரைபதத்தில் சுருங்கிய நெல்லாக இருப்பதாக கூறி பட்டியல் எழுத்தர் ஐயப்பனுக்கு ரூ.78,000 அபராதம் விதித்தார். இதனால் மனமுடைந்த ஐயப்பன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மயிலாடுதுறை சித்தர்காடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு ஏஐடியுசி சங்கத்தின் டிஎன்சிஎஸ்சி தொழிலாளர் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, ஐயப்பனின் தற்கொலை முயற்சிக்கு காரணமான தரக்கட்டுப்பாட்டு மேலாளரை வேலை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுசசெயலாளர் சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.