காஷ்மீர் போரில் இறந்த வீரர்களுக்கு பித்ரு தர்ப்பணம்
காஷ்மீர் போரில் இறந்த வீரர்களுக்கு பித்ரு தர்ப்பணம்
மகாளய பட்ச அமாவாசையை முன்னிட்டு திருச்செங்கோட்டில் பித்ரு தர்ப்பணம் வயநாட்டில் மண்சரிவால் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட்டது. புரட்டாசி மாத அமாவாசை தினத்தில் இறந்த மூதாதையர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள மயில் ஆசிரமத்தில் பித்ரு தர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் 82 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு கருப்பு எள் துளசி அரிசி பருப்பு வெல்லம் கங்கை தீர்த்தம் மஞ்சள் விபூதி குங்குமம் சந்தனம் வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்களைக் கொண்டு பித்ரு தர்ப்பணம் செய்தனர். காஷ்மீர் எல்லை போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு மற்றும் சமீபத்தில் வயநாடு பகுதியில் மண் சரிவால் இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இறந்து போன தங்கள் தாய் தந்தையர்களை நினைத்து கண்ணீர் கசிய தர்ப்பணம் செய்தனர்...