தருமபுர ஆதினத்தில் உள்ள அஷ்டதசபுஜ மகாலட்சுமி கோயில் நவராத்திரி விழா யாகம்
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் உள்ள பதினெட்டு கைகளுடன் கூடிய ஶ்ரீ அஷ்டாதசபுஜ மகாலெட்சுமி துர்காதேவி கோவிலில் நவராத்திரி விழ◌ாவை முன்னிட்டு சதசண்டி வேள்வி விழா யாகம் துவக்கம். தருமபுர ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்பு
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தருமபுரீஸ்வரர் ஆலயத்தில், பதினெட்டு கைகளுடன் கூடிய ஶ்ரீ அஷ்டாதசபுஜ மகாலெட்சுமி துர்காதேவி கோவில் உள்ளது. இவ்வாலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 74ஆம் ஆண்டு சதசண்டி வேள்வி விழா யாகம் நேற்று கணபதி ஹோமத்துட்ன துவங்கிய நிலையில் இன்று யாகசாலை பிரவேச பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு 10 நாட்கள் நடைபெறும் யாகத்தின் முதல் நாளான இன்று சதசண்டி யாகம் நடைபெற்றுது. சப்தசதீபாராயணம், வேதபாராயணம், சுவாசினிபூஜை. கன்யா வடுபூஜைகள். மகாபூரணாகுதி, சோடச தீபாரதனை. மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்கு தீபாரதனை செய்யப்பட்டது. இதில் தருமபுரம் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.