ஆண்டிபட்டியில் மரங்களை நடவு செய்து பராமரித்து வரும் அரசு மருத்துவமனை அலுவலர்
அருணாச்சலம் என்பவர் ஆண்டிப்பட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்களை நடவு செய்து இன்றுவரை பராமரித்து வருகிறார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் அருணாச்சலம் என்பவர் அரசு மருத்துவமனை மற்றும் ஆண்டிபட்டி பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறார் மேலும் அவர் தெரிவிக்கயில் நான் பணிபுரியும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் 20 மரக்கன்றுகள் நட்டு நானே தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றேன் . நான் வசிக்கும் பாலாஜி நகர் கிழக்கு குடியிருப்பு தெரிவில் 19 மரங்கள் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றேன் அருகில் உள்ள வீட்டு நண்பர்களையும் மரம் வளர்ப்பதற்கு உற்சாகப்படுத்தி வருகின்றேன் மரம் வளர்பதினால் மரம் நச்சு காற்றை உட்கொண்டு நாம் சுவாசிப்பதற்க்கு ஆக்ஸிஜன் வெளியிடுகின்றது உலக வெப்பமயமாதல் தடுக்கப்படுகிறது பறவைகள் தங்குவதற்கு புகழிடமாகின்றது விவசாயம் வளர்வதற்கு மழையைகொடுக்கின்றது பூமியில் தண்ணீர் சேமித்து வைக்கின்றது பூமியின் மண் அரிப்பை தடுக்கிறது பூமிக்கு வலிமை சேர்க்கிறது ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கிறது பறவைகள் விலங்குகளுக்கு உணவு அளிக்கின்றது .நாம் இந்த பூமியில் வாழ்வதற்கு எல்லாவகையிலும் பயன்படுகிறது இதனால் நான் மரங்களை நட்டு பாதுகாத்து வருகிறேன் என்றார் மேலும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த மரங்களை ஒவ்வொருவரும் குறைந்தது பத்து மரங்கள் நட்டு வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்