ஆண்டிப்பட்டி அருகே மரிக்குண்டு சிட்கோவில் தொழில் மனைகள் வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
ஆண்டிபட்டியில் 2 தொழில்மனைகளும் மரிக்குண்டுவில் 38 தொழில்மனைகளும் காலியாக ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் திம்மரசநாயக்கனூர் கிராமம் மற்றும் மரிக்குண்டு கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டைகளில் ஆண்டிபட்டியில் 2 தொழில்மனைகளும் மரிக்குண்டுவில் 38 தொழில்மனைகளும் காலியாக ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது. புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விரும்புவோர் https//www.tansidon.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், தமிழ்நாட்டில் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலி மனைகள் விபரங்களை மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்துகொண்டு தேவையானவற்றை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட காலி தொழில் மனைகளை பார்வையிட ஆ.பிரான்சிஸ் நோயல், கிளை மேலாளர் / தொழிற்பேட்டை கோ.புதூர், மதுரை-07 என்ற முகவரியில் நேரிலோ மற்றும் 9445006576 என்ற தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது bmmdu@tansidco.org என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.