தேனி வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி
கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் மற்றும்TNSRLM சார்பில் 13 நாட்கள் இலவச பயிற்சிகள் நடத்தப்படுகின்றன
தேனி வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் பெண்களுக்கு கனரா வங்கியின் சார்பாக ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது பெண்களுக்கான தையல் பயிற்சி எம்பிராய்டரி பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி அழகு கலை மேலாண்மை பயிற்சி காளான் வளர்ப்பு பயிற்சி அப்பளம் ஊறுகாய் மசாலாத்தூள் தயாரித்தல் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் பயிற்சி தொழில் முனைவோர் பயிற்சி சணல் பை தயாரித்தால் செயற்கை நகை ஆபரணம் தயாரித்தல் செல்போன் பழுது நீக்கம் மென் பஞ்சு பொம்மை தயாரித்தல் இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வீட்டு முறை அகர்பத்தி தயாரித்தல் மற்றும் பெண்களுக்கான பல சுய தொழில் பயிற்சிகளை இந்த நிறுவனம் நடத்தி வருகின்றது தேனி தாலுகா அலுவலகம் எதிரில் இயங்கி வரும் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் மற்றும்TNSRLM சார்பில் 13 நாட்கள் இலவச பயிற்சிகள் நடத்தப்படுகின்றன இதில் சிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் பயிற்சி முடிவில் பெண்களுக்கு தர சான்றுகள் வழங்கப்பட உள்ளன இதை வழி நடத்தும் பயிற்சி இயக்குனர் எம் ரவிக்குமார் மற்றும் பயிற்றுனர் எஸ் சுரேஷ்குமார் மற்றும் பயிற்சியாளர் திருமதி ஆர் சின்னகாமால் அவர்களுக்கும் இந்த வாய்ப்பை பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்படுத்திக் கொடுத்த கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்துக்கும் , ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலர்களுக்கு இப்பகுதி பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்