மயூரநாதர் அபயாம்பிகை சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு ஶ்ரீஅபயாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டு. கொலுகாட்சியில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி சோடசதீபாரதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் சிவனை பார்வதி தேவி மயில் உருவில் பூஜித்து சாப விமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் நவராத்திரியின் 6 ஆம் திருநாளாக ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் கொழுமண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சோடச தீபாராதனை, மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை செய்யப்பட்டது. முன்னதாக ஶ்ரீஅபயாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்த கொண்டு நவராத்திரி கொலுகாட்சியை தரிசனம் செய்தனர்.