ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை.
பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி, செயலாளர் மாத்யூஜோயல் மற்றும் ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேக் கிழார்பட்டி சாலையில் அமைந்துள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து மஞ்சள் இட்ட பச்சரிசியில் கைவிரலை பிடித்து வித்யாரம்பம் எழுத வைத்து மாணவர் சேர்க்கையில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பின்னர் தமிழ் மொழியின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை எழுதி பழகி கொடுத்தனர். பெற்றோர்களும், மாணவர்களும் உற்சாகமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். மேலும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கேக் வழங்கப்பட்டது. பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி, செயலாளர் மாத்யூஜோயல் மற்றும் ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.