திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீரு நாள் கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு சான்றிதழ்
திருப்பத்தூர் மாவட்டம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.78 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் பெறப்பட்ட மனுக்களை துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் வழங்கி மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு குளிர் காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு தலா 75 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புடைய குளிர் காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்கள் என மொத்தமாக ரூபாய் மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இருசக்கர வாகனங்கள் 40% மானியத்துடன் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவரான கமலேஷ் குத்துச் சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். விளையாட்டு போட்டியில் அவர் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.