ஆண்டிபட்டி அருகே தடுப்பணைகளில் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தால்
கண்டமனூர் , தும்மகுண்டு உள்ளிட்ட பல்வேறு தடுப்பணைகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் யாரும் தடுப்பணைகளில் ஆபத்தை உணராமல் குளிப்பதற்கு இறங்க வேண்டாம்
தடுப்பணைகளில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் யாரும் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வருசநாடு வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு பெய்து கனமழை பெய்து வருகிறது.இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததாலும் வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்கிவரும் மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.ஆற்றிலுள்ள கண்டமனூர் , தும்மகுண்டு உள்ளிட்ட பல்வேறு தடுப்பணைகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் யாரும் தடுப்பணைகளில் ஆபத்தை உணராமல் குளிப்பதற்கு இறங்க வேண்டாம் என பொதுபணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.