களம்பூர் பேரூராட்சி தலைவர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
களம்பூர் பேரூராட்சி தலைவர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தைச் சேர்ந்த களம்பூர் பேரூராட்சிக்குட்பட்ட மேல்அய்யம் பேட்டையில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டிற்கு வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் தண்ணீரை வெளியேற்ற கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் சேர்ந்த களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்அய்யம்பேட்டை பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியுள்ளனர். தற்போது பெய்த பலத்த மழை காரணமாக மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு தெருமுனையில் தெருவை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் வெளியேற்றுவது குறித்து களம்பூர் பேரூராட்சித் தலைவர் கே.டி.ஆர் பழனியிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். மேலும் ஆக்கிரமிப்புகாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு தெருமுனையில் போதிய இடமில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். தற்போது வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பலத்த மழை காரணமாக தினமும் தண்ணீர் தேங்கி மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு மிகவும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்று பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.