விவசாயிகளுக்கு பருவகால சேத இழப்பிற்கு பயிர் காப்பீடு நிதியை தர வலியுறுத்தி விவிவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
ஆரணி, அக் 16. விவசாயிகளுக்கு பருவகால சேத இழப்பிற்கு பயிர்காப்பீடு நிதியை வழங்கக்கோரி ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பருவகால சேத இழப்பிற்கு பயிர் காப்பீடு இடற்நிதியை உயர்த்தி வழங்க மத்திய மாநில அரசுகள் கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும், மழை பயிர் சேத நிவாரணம் வழங்கவும், 100 நாள் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.319 சம்பளம் குறைக்காமல் வழங்கவும், கேரளா போல விவசாய சாகுபடி பணிக்கு 100 நாள் வேலை திட்டத்தை மாநில அரசு பயன்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். சதுப்பேரிபாளையம் மூர்த்தி முன்னிலை வகித்தார். மேலும் இதில் குணாநிதி, தாமோதரன், ஆகாரம் குப்பன், மட்டதாரி அறிவுடைநம்பி, முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.