குளித்தலை சார் ஆட்சியரிடம் சிபிஐஎம் கோரிக்கை

நடவடிக்கை இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை

Update: 2024-10-18 01:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஈச்சம்பட்டி காசா காலனி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த 5 அடி பொதுப்பாதையை அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சமூகத்தினர் பாதையை தடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் பாதையில் நடக்க விடாமல் குழி பறித்தும் தடுத்து வைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபான கடை செயல்பட்டு வருவதால் தினந்தோறும் அதிகாலையில் போதை ஆசாமிகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களிடம் அரை நிர்வாணமாக நின்று கொண்டு தகாத வார்த்தையால் பேசி வருகின்றனர். இதனால் ஜாதி கலவரங்கள் அப்பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் புகார் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்

Similar News