ஜோலார்பேட்டை அருகே வகுப்பை புறக்கணித்து போராட்டம்
ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அரசு பள்ளியில்தற்காலிகமாக பணியாற்றி வந்த கணினி மேற்பார்வையாளர் பெண்ணை பாலியல் சீன்டால் செய்ததாக தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்! விடுவிக்க கோரி மாணவ மாணவிகள் பள்ளியை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி. இவர் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பூனைகுட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இதே பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்தி (26) திருமணம் ஆகி கணவர் இழந்த ஆனந்தி தற்காலிகமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஆனந்தி தமிழ் வழிச்சான்று அபரூவல் கொடுக்கும் வேலை செய்து வந்ததாக தெரிகிறது . அப்போது தலைமை ஆசிரியர் ஆனந்தியை பாலியல் சீண்டல் செய்ததாக அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கூறியுள்ளார் உடனே ஆனந்தியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர் உடனே ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு ஆனந்தி அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இன் நிலையில் தலைமை ஆசிரியர் இந்த பள்ளியில் 12 வருட காலமாக சிறப்பாக பணியாற்றியதாகவும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று மீண்டும் இந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்று பள்ளி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து வெளியேறினர் அப்பொழுது பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தர்ண போராட்டத்தில் ஈடுபட்டனர் உடனே ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் விரைந்து வந்து சமாதானம் செய்து வைத்தனர் மீண்டும் மாணவ மாணவியர் பள்ளிக்கு சென்றனர் இதனால் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது