குளித்தலை எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
மதிய உணவு வேலை இடைவெளியில் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய எல்ஐசி முகவர்சங்கம் எடுத்துள்ள முடிவின்படி தஞ்சை கோட்டம் அனைத்து கிளை அலுவலகங்கள் முன்பு வாயில் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் அக்டோபர் மாதம் முழுவதும் 15,18,22,25,28,30 ஆகிய தேதிகளில் மதிய உணவு இடைவேளையில் பிற்பகல் 1 மணி முதல் 2 மணிவரை நடத்திட உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் புதிய திட்டங்களில் முகவர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் கமிசன் குறைப்பு ,'கிலா பேக் கமிஷன் சரத்தை நீக்க வேண்டும். புதிய திட்டங்களில் பிரிமியம் உயர்வு, பாலிசிகளுக்கான போனஸ் குறைப்பு, குறைந்தபட்ச காப்பீட்டு தொகையை உயர்த்தியது, புதிய பாலிசி எடுக்கும் நுழைவு வயது குறைப்பு போன்ற மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் இதனால் முகவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை வலியுறுத்தியும் குளித்தலை எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு இன்று மதியம் 1 மணி முதல் 2 மணிவரை கோரிக்கை விளக்க வாயில்கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குளித்தலை கிளை முகவர் சங்க தலைவர் வல்லம் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் கோட்ட சங்க தலைவர்கள் நடராஜன் பொன்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முகவர்கள் தேவேந்திரன், ரெங்கராஜ், அரங்கசாமி, ஹரிச்சந்திரன், அய்யாவு, வீரப்பன், சந்திரன் பெரியசாமி, சண்முகம், தமிழ்மணி ஆனந்த், ராஜா, இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.