விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:விராலிமலை வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் 100 சதவீத மானியத்தில் மகாகனி, செஞ்சந்தனம், தேக்கு, வேங்கை மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்படவுள்ளன. மகாகனி 3 ஆயிரத்து 585, செஞ் சந்தனம் 2 ஆயிரத்து 165, தேக்கு 13 ஆயிரத்து 604, வேங்கை ஆயிரத்து 860என்ற எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு வரப்பு பயிராக • நடவு செய்திட ஏக்கருக்கு 64 கன்றுகள் வீதமும், முதன்மை/தனி பயிராக பயிர் செய்திட ஏக்கருக்கு 200 கன்றுகள் வீத மும், அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப் படும். இப்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி சாதகமான பருவநிலை உள்ளதால் தேவையுடைய, தகுதியுடைய விவசாயிகள் உழவன் செயலியில் முன் பதிவு செய்தோ, வேளாண்மை விரி வாக்க மையத்தை நேரில் அணுகியோ பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.